கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, December 28, 2012

    பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்று தொடர்ந்து கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள் மற்றும் முதல் ஆயிரம் மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

    பிளஸ் 2 படிப்பைத் தொடர்ந்து அல்லது ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மாணவர்கள், 1069 மதிப்பெண்களும், மாணவிகள் 1082 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2011-12-ம் கல்வியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசுத் தொகையினைப் பெற்று தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவர்கள், அடுத்த நிதியாண்டு முதல் (2012-2013) ரூ.3 ஆயிரம் பெறலாம்.

    நடப்பாண்டு (2012) மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மேல்படிப்புக்கான மதிப்பெண் பட்டியல் நகல்களுடன் தங்கள் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment