கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, December 18, 2012

    9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம்

    அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

    நடப்பு கல்வியாண்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1 முதல், 8ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, 3ம் பருவ பாடப்புத்தகங்கள், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம்தேதி, பள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்கு, கல்வித்துறைதிட்டமிட்டுள்ளது.

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும்மாணவர்களுக்கு, இலவசமாக வழங்குவதற்காக, 2.5 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது.இதற்கிடையே, அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை,பாடநூல் கழகம் துவக்கி உள்ளது.

    இதுகுறித்து, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், கோபால் கூறியதாவது: தற்போது, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல்,பிளஸ் 2 வரை, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் தேவை.

    தற்போது, 12 சதவீத புத்தகங்கள், இருப்பு இருக்கின்றன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி,பொங்கலுக்கு முன், துவங்கும். 140 அச்சகங்களில், இந்தப் பணிகள் நடக்கும். அடுத்த ஆண்டு, ஏப்ரலில்,அச்சடிப்பு பணியை முடித்து, மே மாதம், பள்ளிகளுக்கு அனுப்ப, திட்டமிட்டுள்ளோம்.

    ஜூன் மாதம், பள்ளிகள் திறந்ததும், மாணவ, மாணவியருக்கு, இலவச பாடப் புத்தகங்கள் கிடைக்கும்வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணிகள் நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு, 9ம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம், அமலுக்கு வருகிறது.இதற்கு, பாட வாரியாக, "சிடி&'க்கள், வந்து கொண்டிருக்கின்றன.

    ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, ஒவ்வொரு பருவத்திற்கும், இரண்டு புத்தகங்களாக வழங்குகிறோம். 9ம்வகுப்பிற்கு, பாடத் திட்டங்கள் அதிகம் இருக்கும் என்பதால், மூன்று புத்தகங்களாக வழங்கலாமா என,ஆலோசித்து வருகிறோம். புத்தகங்களின் விலையில், எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு கோபால்தெரிவித்தார்.

    நடப்பு கல்வியாண்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 80பக்கங்கள் கொண்ட, அட்லஸ் புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு தகவல் புதையல்கொண்ட இந்த புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில், தரமானதாக, பாடநூல்கழகம் உருவாக்கிஉள்ளது.

    நடப்பாண்டில், அட்லஸ் பெறும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த ஆண்டு, மீண்டும் வழங்கப்பட மாட்டாது.
    அடுத்த ஆண்டில் இருந்து, 6ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும், இலவச அட்லஸ் வழங்கப்படும்என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments:

    Post a Comment