கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, December 5, 2012

    அரையாண்டு தேர்வில் பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்?

    கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே இது நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில்கேட்கப்பட்ட, பாடப் புத்தகத்தில் இல்லாத, கட்டாயமாக்கப்பட்டவினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாககுறைந்தது; மாணவ, மாணவியர் பலர், கல்லூரியில், விரும்பியபாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது, மாணவர்களின் நலன் கருதி, கட்டாய வினாக்கள், பொதுவினாக்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றிகல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்படஉள்ளது. வாய்மொழி உத்தரவு, எழுத்துப்பூர்வமாக வரும் வரை, ஏதுவும் சொல்ல இயலாது" என்றார்.

    கோவை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, 10ம்வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில், ஐந்து மதிப்பெண் ஒன்றும், இரண்டு மதிப்பெண் ஒன்றும்,கட்டாய வினாக்களாக கேட்கப்பட்டன. இதனால், சதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாககுறைந்தது.

    வரும், 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. கட்டாய வினாக்கள்,பொது வினாக்களாக மாற்றப்பட்டது குறித்து, தகவல் சார்ந்த அறிக்கை ஏதும், இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

    No comments:

    Post a Comment