கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Saturday, April 27, 2013

  1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

  வரும் கல்வி ஆண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.


  மே மாத கோடை விடுமுறைக்கு பின்னர் 201314ம் கல்வி ஆண்டுக்கான நடைமுறை தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணியில் கல்வித்துறை இறங்கியுள்ளது.

  பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணி இடங்கள் பல்வேறு வழிகளில் உருவாகின்றன. குறிப்பாக பணி ஓய்வு பெறுவதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பணியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக செல்பவர்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட காலி இடங்களும் உருவாகின்றன. மேலும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 5 முதல் 9 காலி பணி இடங்கள் வரை சுமார் 800 பணி இடங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறாக மொத்தம் 1,400 பணி இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.

  இவை அனைத்தும் மே மாதம் முடிந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தினால் மட்டும் தான் ஏற்கனவே இடமாறுதல்களுக்காக சொந்த மாவட்டங்களை விட்டு வெளி மாவட்டங்களில் பணி புரிபவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது என பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் வடமாவட்டங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நிலையில் சொந்த மாவட்டங்களுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்,எனவே இவர்களின் நலன் கருதி அனைத்து விதமான புதிய காலி பணி இடங்கள் உருவான பின்னர் அவை பற்றி விவரத்தை ஒளிவு மறைவின்றி முழுமையாக அறிவித்து ஏற்கனவே காத்திருக்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து இடமாறுதல் உத்தரவு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  No comments:

  Post a Comment