கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, April 24, 2013

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அனை வருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின¢றனர். இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.


    தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.உடற்கல்வி ஆசிரியர், பகுதி நேர ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று நாள் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.தற்போது இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு காலியிடம் உருவானது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    No comments:

    Post a Comment