கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Sunday, April 28, 2013

  மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்

  * இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.


  * மாறுதல் குறித்த அரசாணையும் இயக்குநரகத்தால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியான பின்னரே கலந்தாய்வு பற்றித் தெளிவான நிலைக்கு வரமுடியும். ஆனாலும் ஆசிரியர்கள் சற்று முன்னேற்பாடாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.

  * சிறப்பு முன்னுரிமைக்கான சான்றுகள், வாழ்க்கைத் துணைவரின் பணிச்சான்று போன்றவற்றை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளவும். ஒருசில வருடங்களில் நடந்த மாறுதலின்போது கணவன் / மனைவி பணிபுரியும் இடங்களுக்கு இடையேயான தொலைவு குறும அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட தொலைவுக்கிடையே பணிபுரியும் தம்பதியர் இம்முன்னுரிமையை இழந்தனர். மேலும் ஒருமுறை இச்சலுகையைக் கொண்டு மாறுதல் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கு மீண்டும் அதே முன்னுரிமையைப் பெற முடியாது என்பது போன்ற நெறிமுறை விதிகள் வெளிவர வாய்ப்புண்டு. பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் (பேனல்) உள்ளவர்கள் அசல் மற்றும் இரண்டு செட் கல்விச் சான்றுகளைத் தயாராக வைத்திருக்கவும்.

  * தற்போதுள்ள நிலவரத்தை மட்டுமே வைத்து காலிப்பணியிடங்களை அறுதியிட்டுக் கூற இயலாது. முதல் கட்டக் கலந்தாய்வின் பின் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நீங்கள் எதிர்பாராத வகையில் மாற்றத்திற்குட்பட்டது. அதனால் மாறுதல் கல்ந்தாய்வில் கலந்து கொண்டாலும் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டாலும் மாறுதல் விண்ணப்பத்தினை உரிய காலத்தில் ஒப்படைப்பது உசிதம். ஒருவேளை உங்களுக்குத் தோதான இடம் பின்னர் காலியாகும் நேர்வில் "அடடா நாம் முன்னரே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த இடத்திற்கு மாறுதல் பெற்றிருக்கலாமே, வாய்ப்பு கைநழுவி விட்டதே!" என்று பின்னர் வருத்தப்படக்கூடாது.

  * மாறுதல் விண்ணப்பத்தை ஒப்படைக்கும் போதே அத்தாட்சிக்கான ஒரு விண்னப்பத்தைச் சேர்த்தே வழங்க வேண்டும். அதில் அலுவலரின் கையொப்பம் பெற்றுப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோருக்கு இது மிகவும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  * ஒன்றியத்திற்குள் மாறுதல் கோருவதற்குத் தனியாகவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவதற்கும் தனித்தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

  * மாறுதல் விண்ணப்பங்கள் பெற்றபின் அலுவலகத்தில் 'அ' பதிவேடு, 'ஆ' பதிவேடு போன்ற தொகுப்புப் பட்டியல்கள் தயாரிக்கப்படும். அதில் மாறுதல் கோருவோரின் விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்.

  * மனமொத்த மாறுதல் கோருவதென்றால் வழக்கமான மாறுதல் விண்ணப்பப் படிவத்துடன் முகப்புக் கடிதம் ஒன்றையும் இணைத்துப் பணிந்தனுப்ப வேண்டும். முகப்புக் கடிதத்தில் அனுப்புநர் முகவரியில் தற்போது பணிபுரியும் பள்ளியையும் கடித விவரத்தில் மாறுதல் கோரும் பள்ளியையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

  பெறுநர்: மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
  வழி: 1. தலைமையாசிரியர்,
  2. உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்.


  இதற்கும் ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவும்.

  * மாறுதல் / பதவி உயர்வு பெறும் பள்ளிக்கும் தற்போது பணிபுரியும் பள்ளிக்கும் இடையே குறைந்த பட்சம் 8 கி.மீ தொலைவு இருந்தால் பணியேற்பிடைக்காலம் (குறைந்தது 5 நாட்கள், தொலைவைப் பொறுத்து அதிகரிக்கும்) கிடைக்கும் இதை அனுபவிக்கலாம் அல்லது ஈட்டிய விடுப்புக் கணக்கிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

  * மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளன்று உரிய நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று விடுங்கள். உயர்கல்வித் தேர்வு, பயிற்சிப் பணிமனை, மருத்துவ சிகிச்சை போன்ற காரணத்தால் நீங்கள் செல்ல முடியாத சூழல் எனில் உங்கள் கணவர் / மனைவி / பெற்றோர் / உடன்பிறந்தோர் எவரையேனும் அனுப்புவதாக இருந்தால் ஒரு தாளில் நீங்கள் வர முடியாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு உங்கள் சார்பாக உங்களால் பரிந்துரைக்கப்படும் நபர் கலந்துகொள்ள அனுமதி வேண்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் எழுத வேண்டும். அதில் உங்களுக்குப் பதிலாகக் கலந்து கொள்வோரின் பெயர், உறவுமுறை குறிக்கப்பட்டு மாதிரிக் கையொப்பம் பெறப்பட்டு அதன்கீழ் உங்களால் கையொப்பமிடப்பட வேண்டும். துறை உயர் அதிகாரியின் அனுமதி இருப்பின் விதிகளுக்குட்பட்டு இம்முறை ஆவன செய்யப்படலாம்.

  * கலந்தாய்வு முறையைக் கல்வித்துறையில் அறிமுகப்படுத்திய இந்த அரசு, இவ்வாண்டு நேர்மையான முறையில் அனைத்துத் தரப்பு ஆசிரியர்களும் நம் அமைப்புகளும் பாராட்டும்படியான வெளிப்படையான ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வினைச் சிறந்த முறையில் நடத்தும் என்ற நம்புகிறோம்.

  மாறுதல் கோரும் அனைவரும் தாங்கள் விரும்பும் இடத்திற்கு மாறுதல் பெறவும், பதவி உயர்வு பெறுவோரின் பணி மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறோம்..!!!

  No comments:

  Post a Comment