கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Sunday, April 21, 2013

  நாமக்கல் "மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர் காலிப்பணி விண்ணப்பம் வரவேற்பு: சி.இ.ஓ.,

  "மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், ஏப்ரல், 27ம் தேதி மாலை, 5 மணிக்குள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  அதற்கான மாதிரி படிவம், முதன்மை கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்கம்), மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

  உடற்கல்வி ஆசிரியர் ஒன்பது, கலை ஆசிரியர் (ஓவியம்) 13, கம்ப்யூட்டர் பயிற்றுனர் இரண்டு, தையல் ஆசிரியர் ஐந்து, இசை ஆசிரியர் இரண்டு என மொத்தம், 31 காலிப்பணியிடம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  No comments:

  Post a Comment