கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, August 6, 2013

    REGULAR - பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பம் : 9ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு

    பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பி.எட்., சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி, மாலை, 3:00 மணி வரை, வினியோகிக்கப்படும். வரும், 15ம் தேதி, விண்ணப்ப வினியோகம் இருக்காது. மற்றபடி, சனி, ஞாயிறு உட்பட, அனைத்து நாட்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
    இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட, ஏழு அரசு கல்லூரிகள், ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்

    1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை, சென்னை.
    2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி, சென்னை.
    3. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.
    4. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.
    5. அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை.
    6. அரசு கல்வியியல் கல்லூரி, கோவை.



    7. அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர்
    8. லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராம், திண்டுக்கல் மாவட்டம்.
    9. ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி, பேர்லாண்ட்ஸ், சேலம்.
    10. தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, மதுரை.
    11. வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி.
    12. செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை.
    13. என்.வி.கே.எஸ்.டி., கல்வியியல் கல்லூரி, ஆற்றூர், திருவட்டார்.

    No comments:

    Post a Comment