கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, September 4, 2013

    மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

    CLICK HERE TO VIEW MORE DETAILS


    இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 



    பிரிவுகளும் காலி இடங்களும்


    யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டென்டன்ட்-ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


    தேவைகள்


    யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


    ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரலாறு, ஆர்க்கியாலஜி, சமஸ்கிருதம், பெர்சியன், பிரக்ரித், பாலி, அராபிக், ஆந்த்ரபாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வரலாறு, தொல்பொருள் தொடர்புடைய இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சயிண்டிஸ்ட் பி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாவரவியல் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


    சித்தா மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆயுர்வேதப் பிரிவில் பட்டப் படிப்பும், யுனானி மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க இதே பிரிவில் பட்டப் படிப்பும் தேவைப்படும்.


    இதர தகவல்கள்


    யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.


    விண்ணப்பிக்க இறுதி நாள்: 12/09/2013

    No comments:

    Post a Comment