கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, November 9, 2013

    முதலமைச்சரை சந்திக்க முடிவு.இன்று ( 9.11.2013 ) டிட்டோ-ஜாக் கூட்டத்தில் உடன்பாடு

    இன்று சென்னையில் கூடிய டிட்டோ-ஜாக் கூட்டத்தில் அதன் உறுப்பைச் சார்ந்த 7 இயக்கங்களும் பங்கேற்றன. இக்கூட்டத்தில்
    1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்
    2. தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இரத்து
    ஆகிய இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்க நடவடிக்கை மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது. 



    இது குறித்து 13.11.2013 அன்று தமிழக முதல்வரை சந்திப்பது எனவும் அதன் பின் அமைச்சர் மற்றும் கல்வித்துறையின் உயர் அலுவலர்களை சந்திப்பது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மீளாய்வு கூட்டம் வருகிற 20.11.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் கூடுவதெனவும் அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. சுழற்சி தலைமையின் ஒரு பகுதியாக அடுத்த கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அலுவலகத்தில் 20.11.2013 அன்று நடைபெறும். இதன் மூலம் தொடக்ககல்வித்துறையில் உள்ள ஆசிரியர் இயக்கங்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment