கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Tuesday, April 8, 2014

  ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை (10-4-14) விண்ணப்பம்

  'ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.


  அவரது அறிவிப்பு: தனி தேர்வர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 'வெப் கேமரா' வசதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, தனி தேர்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக, ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய் மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக, 100 ரூபாய் (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்), பதிவு மற்றும் சேவை கட்டணமாக, 15 ரூபாய், இணையதள பதிவு கட்டணமாக, 50 ரூபாயை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திடமே செலுத்த வேண்டும். வரும் 13 மற்றும் 14 நாட்கள் தவிர, இதர நாட்களில், விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

  No comments:

  Post a Comment