கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Wednesday, April 2, 2014

  வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு

  வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது.


  தற்போது, ரூ.2 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.


  இந்நிலையில், வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தது. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இந்த சிபாரிசுகளை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது.

  வருமானவரி சட்டங்களுக்கு பதிலாக, நேரடி வரிகள் சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா, 2009-ம் ஆண்டில் இருந்து கிடப்பில் கிடக்கிறது. அதில் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உருவாக்கி உள்ள, திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா, மத்திய நிதி அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாகவே நீடிக்கும். அதை ரூ.3 லட்சமாக உயர்த்த முடியாது. அதுபோல், இதர வருமானவரி விகிதங்களையும் மாற்றி அமைக்க முடியாது. இந்த சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டால், உத்தேசமாக, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

  ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் உடைய தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக்குடும்பங்கள், ‘சூப்பர் பணக்காரர்கள்’ ஆக கருதப்படுவார்கள். அவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சொத்துடைய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டி இருக்கும். பங்கு பரிவர்த்தனை வரியை கைவிட வேண்டும் என்ற சிபாரிசையும் ஏற்க முடியாது.

  அதே சமயத்தில், மூத்த குடிமக்களுக்கான வருமானவரி விலக்கு சலுகையை பெறுவதற்கான வயது வரம்பு, 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்படுகிறது. இதன்மூலம், அதிகமான மூத்த குடிமக்கள் வருமானவரி சலுகையை பெறுவார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இந்த திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா மீது, தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

  No comments:

  Post a Comment