கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, May 14, 2014

    கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்; பள்ளி அதிர்ச்சி

    கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்...


    உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...
    ''நிலைகுலைந்த ஆசிரியை, இனி பணி செய்ய முடியாதுன்னு சொல்லி, ராஜினாமா லெட்டர் குடுத்தாங்க... ஆனால், அவரை பள்ளி நிர்வாகம் சமாதானம் செஞ்சுச்சு... இப்ப அந்த மாணவன் என்ன செய்யிறான் தெரியுமா... பேஸ்புக், மின்னஞ்சல்களில், பள்ளி நிர்வாகத்தைப் பத்தி, கடுமையா விமர்சிச்சிட்டிருக்கான்...
    ''அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அந்த தகவல்களை சேகரித்து வருவதோடு, நடப்பாண்டு முதல், மேல்நிலை வகுப்பு, மாணவர்களையே சேர்க்கக் கூடாதுன்னும், மாணவியருக்கு மட்டும், 'அட்மிஷன்' குடுக்கலாம்ன்னும் முடிவு செஞ்சிடிச்சு... இது போல, மாணவர்கள் நடந்துக்கிட்டாங்கன்னா, மத்த பள்ளிகளும், மாணவர்களைச் சேர்க்க, தயங்குமேங்க...'' என்று

    கூறியபடி, கவலை தோய்ந்த முகத்துடன், கிளம்பினார் அந்தோணிசாமி.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

    http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

    No comments:

    Post a Comment