Pages

Saturday, August 25, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு: அக்டோப்ர் 3 மீண்டும் தேர்வு & ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படும் மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை

தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 3-ந்தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படு கிறது. இத்தேர்வை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை. புதிதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.

ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே எழுத முடியும். மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு கடிதம் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment