Pages

Friday, August 17, 2012

ஓணம் பண்டிகை : சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை -திணமணி

சென்னை, ஆக., 17 : சென்னை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 29ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில், செப்டம்பர் 15ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான ஆகஸ்ட் 29ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. ஜெயந்தி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment