கல்வி நிதியை கையாடல் செய்த பள்ளித் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை, சிங்கம்புணரி அருகே வி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் ராமசந்திரன். அனைவருக்கும் இடைநிலைகல்வி திட்ட நிதி, ரூ.2.90 லட்சத்தை கையாடல் செய்தார்.
அவரைகல்வி இயக்குனர் தேவராஜன் இடைநீக்கம் செய்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கையாடல் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக 70க்கும் அதிகமான தலைமை ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment