Pages

Friday, December 14, 2012

10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்: தேர்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள் தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி" க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...

மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி,முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்துவிவரங்களுடன், "சிடி"க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட"சிடி"க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொருபள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி"க்கள்தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன.

மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும் போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள்விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி&'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு,அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment