Pages

Monday, January 7, 2013

51 தலைமை ஆசிரியர்கள் டி.இ.ஓ.,க்களாக உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 51 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்த டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டன. இந்த பட்டியலுக்கு, துறையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, 51 பேரும், டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு செய்து, உத்தரவு வெளியிடப்பட்டன.

தலைமை ஆசிரியர்கள், டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள், உடனடியாக நிரப்பப்பட மாட்டாது என்றும், பொதுத்தேர்வுக்குப் பிறகே நிரப்பப்படும் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பட்டதாரி மற்றும் பணிமூப்பு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். இவர்களை பதவி உயர்வு செய்தால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment