Pages

Wednesday, January 2, 2013

விளக்கம் கேட்கிறது கல்வித்துறை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து தொடக்கக் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பணி இலக்குகள் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்விச் செயலர் தலைமையில் சென்னையில் வருகிற 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே மூன்றாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், 4வது செட் சீருடைகள், விலையில்லா கிரையான்கள், கணித வரைபட உபகரணப்பெட்டி ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கிய விவரம், குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் விபரம் சேகரிக்க வேண்டும். 5ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் மீதான ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும். நடுநிலை பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பேட்டரி டெஸ்ட் நடத்தியது, புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள், முதல்வரின் தனிப்பிரிவு பெட்டிசன் மீதான நடவடிக்கை, பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட அன்னையர் பள்ளி கல்விக்குழு, அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், அதன் மீதான நடவடிக்கை விபரங்களை சேகரிக்க வேண்டும். இதுதவிர புதிதாக தொடங்க வேண்டிய தொடக்க பள்ளிகள், தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளிகள், பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை ஜனவரி 4ம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment