Pages

Sunday, January 6, 2013

மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்களை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக ஆசிரியர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது

மாணவர்களுக்கான அரசு நலத்திட் டங்களை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக ஆசிரியர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:

*பள்ளிக்கு செல்லாத பள்ளி வயது குழந்தைகளை அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும், ஆசிரியர்களும், அவர்களுக்குரிய பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கண்டறிய வேண்டும்.
*தங்கள் பள்ளிக்குரிய அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வயது குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் பராமரிக்கப்படும் அதற்கான படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* ஐந்து வயது நிரம்பிய குழந்தைகள், ஒருபோதும் பள்ளியில் சேராத குழந்தை கள், குழந்தை தொழிலாளர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், இடம் பெயர்ந்து சென்றவர்கள் ஆகியோரை கண்டறிந்து பெயர் பட்டியல் தயாரிக்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கின்ற பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.
*பள்ளிக் குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், சீருடை, இலவச புத்தகப்பை, வண்ண பென்சில், காலணிகள், சத்துணவு, இலவச பாட புத்தகங்கள் பற்றியும், மாற்றுப்பள்ளி உண்டு உறைவிட முகாம்கள் பற்றியும் பேரணியின்போது விளக்க வேண்டும்.
*நகர்புறங்களில் உள்ள குடிசை பகுதிகளில் பேரணி நடத்த வேண்டும்.
*பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் பெற்றோரை கண்டறிந்து அவர்களை பேரணிக்கு அழைத்து அறிவுரை வழங்க வேண்டும்.
*கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவ மாணவியர் விபரத்தை தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment