Pages

Saturday, January 26, 2013

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையைவெளியிட வலியுறுத்தல்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையை வெளியிட, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில், "அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என, ஜெயலலிதா தெரிவித்தார்.
ஊதிய முரண்பாடுகளை களைய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிருஷ்ணன் தலைமையில், மூவர் குழுவை, முதல்வர் நியமித்தார்.இக்குழு, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்து, இரு மாதங்கள் ஆகின்றன. அறிக்கை மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. காலம் கடத்தாமல், மூவர் குழு அளித்த பரிந்துரைகளை, முழுவதுமாக வெளியிட வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட ரத்து அறிவிப்பை, கவர்னர் உரையில் வெளியிடவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment