Pages

Monday, February 18, 2013

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும். அந்த குழுக்கள், பிப்.,18, 19 தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு வகுப்பறை, ஆய்வக வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனரா, என நேரடியாக ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும்.
இதன் முழு விவரங்களை அறிக்கையாக தயாரித்து, இம் மாதம் 20ல் சென்னையில் நடைபெற உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், சமர்பிக்க வேண்டும், என பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment