Pages

Wednesday, March 6, 2013

11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன. 25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி&' தேர்வு நடக்கிறது. இதுபோன்ற தேர்வுகளை, வழக்கமாக, இணை இயக்குனர்கள், நேரடியாக கண்காணிப்பர். இந்த ஆண்டு, கல்வித்துறை இயக்குனர்களும், நேரடியாக சென்று, முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த உத்தரவை, அமைச்சர் பிறப்பித்தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment