Pages

Thursday, March 14, 2013

"டெசோ' அமைப்பு, கடந்த, 12ம் தேதி நடத்திய, "பந்த்' நாளில் வேலைக்கு வராமல் "மட்டம்'அரசு ஊழியர், ஆசிரியர் மீது நடவடிக்கை?

"டெசோ' அமைப்பு, கடந்த, 12ம் தேதி நடத்திய, "பந்த்' நாளன்று, வேலைக்கு வராத அரசு ஊழியர், ஆசிரியர்களின் விவரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் மீது, விரைவில், துறை ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.பந்த் அறிவிப்பு வெளியாவதற்கு முன், விடுமுறைக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர், ஆசிரியர்களைத் தவிர, இதர ஊழியர்கள், ஆசிரியர்களில்,யார் யார், 12ம் தேதி, வேலைக்கு வரவில்லையோ, அவர்களின் விவரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, பகல் 12:00 மணிக்கே, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன.சம்பந்தப்பட்ட ஊழியர், ஆசிரியர்களிடம், முன்னறிவிப்பு இன்றியும், முறையாக விண்ணப்பிக்காமலும், விடுமுறை எடுத்தது குறித்து, விளக்கம் கேட்கப்படும் என்றும், இதன்அடிப்படையில், துறை ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பொதுவாக, விளக்கம் கேட்டுவிட்டு, விட்டுவிடுவர். இப்போதும், எவ்வித நடவடிக்கையும் வராது என, நம்புகிறோம். "17-ஏ' (எச்சரிக்கை) மற்றும் "17-பி' ஆகிய பிரிவுகளின் கீழ், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, வழி வகை உள்ளது. இதில், 17-ஏ பிரிவின்படி, பதவி உயர்வை, ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கலாம். 17-பி பிரிவின்படி, ஒரு நாள் சம்பள உயர்வை, "கட்' செய்யலாம்.இவ்வாறு அவர்கள்

No comments:

Post a Comment