Pages

Thursday, April 4, 2013

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: ஏப்., 10ல் துவக்கம்

தமிழகத்தில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி, ஏப்., 10ல் துவங்குகிறது.வரும் கல்வியாண்டில், ஆறு வயது முதல், 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும், 


பள்ளியில் சேர்க்கும் விதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு, ஏப்., 10 துவங்கி, 27 வரை நடக்கிறது.
இப்பணியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈடுபட முடிவு செய்துள்ளது.


No comments:

Post a Comment