Pages

Thursday, April 4, 2013

கல்லூரியில் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை

கல்லூரிகளில், கட்டாய நன்கொடையை வசூலைத் தடுக்க, 1992ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்தோம். இதன்படி, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டாய நன்கொடை வசூல் குறித்து, இக்குழுவிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



எந்த கல்லூரியில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்பதை, குறிப்பிட்டு சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக குற்றச்சாட்டுகளை கூறுவதில் பயனில்லை. அரசு அமைத்துள்ள, குழுவுக்கும் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை.
 

தனியார் கல்லூரிகளின் கட்டண நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு, கட்டண உயர்வு குறித்து, கல்லூரிகள் மனு செய்கின்றன. குழு, கட்டணத்தை நிர்ணயிக்கிறது. இதில், அரசுக்கு சம்பந்தம் இல்லை.
 

 உறுப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை, முதல், ஐந்தாண்டுகள் பல்கலைக் கழகம் வழங்கும். அதன் பின், அரசு ஏற்கும். இதன்படி, ஐந்தாண்டுகள் முடிந்த கல்லூரிகளுக்குத் தேவையான வசதிகளை, அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment