Pages

Friday, April 26, 2013

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம்

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக 



பெற்றோர் பலர் குழந்தைகளை தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்த போட்டியை சமாளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் தெரிவிப்பது, பொதுஇடங்களில் பழகும்போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது, உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளை கற்பிப்பது போன்ற பல பயனுள்ள தகவல்கள் தமிழ்-ஆங்கிலம் கலந்து (பை லிங்குவல்) ரேடியோ மூலம் உரையாடல் வடிவில் கற்பிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment