Pages

Thursday, April 25, 2013

காஞ்சியில் மே, ஜூன் மாதங்களில் வீடுகள், நிறுவனங்களில் பொருளாதார கணக்கெடுப்பு பணி துவக்கம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே, ஜூன் மாதத்தில் வீடுகள், நிறுவனங்களில் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் சித்திரசேனன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு முன்னேற்பாடு குறித்த கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் சித்திரசேனன் தலைமை வகித்து பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு வீடுகள், நிறுவனங்களில் நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளி விவரம் மக்கள் பயன்பாட்டுக்கு திட்டம் தீட்ட ஏதுவாக இருக்கும். பொருளாதார நிலையறிந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் நலத்திட்டத்தை செயல்படுத்த முடியும். கிராம, நகர்புற பகுதிகளில் வேலையற்ற பட்டதாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தொடக்கக்கல்வி பள்ளி ஆசிரியர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. 

கிராம புறங்களில் வட்டாட்சியர் மூலமும், நகர் புறங்களில் நகராட்சி ஆணையர் மூலமும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இப்பணியில் வருவாய்த்துறை, விவசாயத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் புள்ளியியல் துறை பணியாளர்கள் ஈடுபடுவார்கள். இந்த கணக்கெடுப்பு பணி மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நடக்கிறது. கணக்கெடுப்புக்கு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்
படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

No comments:

Post a Comment