Pages

Wednesday, April 17, 2013

தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்காத நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பாளை அருகே மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பான வாகன தகவல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக பொது தகவல் அலுவலரிடம் ( வட்டார போக்குவரத்து அலுவலர்),,

கேட்கப்பட்டது.ஆனால் இந்த வாகன தகவல் தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய தகவல்களை அளிக்கவில்லை. மேலும், வாகனம் தொடர்பான தவறான தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்ததுஇதனையடுத்து பாளை நுகர்வோர் கோர்ட்டில் இதுதொடர்பாக மனுதாரர் வக்கீல் பிரம்மா வழக்கு தொடர்ந்தார்.இதனை நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விசாரித்து மனுதாரரின் மன உளைச்சலுக்காக 15 ஆயிரம், வழக்கு செலவாக 3 ஆயிரம் ரூபாய் உட்பட 18 ஆயிரம் ரூபாய் 60 நாட்களுக்குள் நாகர்கோவில் பொது தகவல் அலுவலர் (வட்டார போக்குவரத்து அலுவலர்) வழங்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment