Pages

Sunday, June 23, 2013

தமிழக அரசு எச்சரிக்கை மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர் கல்விச்சான்றுகள் ரத்து

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு: பள்ளி ஆசிரியர்கள் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். புதுமையில் நாட்டம் உள்ளவர்களாகவும், திறமைகளை வளர்த்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். 


பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்.
மாணவ, மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment