Pages

Wednesday, September 25, 2013

அரசு பள்ளிகளுக்கு ரூ.1.56 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழக எம்.டி., தகவல்



அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்காக, ரூ.1.56 கோடி இலவச பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வினியோகிகப்பட்டு உள்ளன, '' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.



அவரது அறிவிப்பு:

இலவச பாடப் புத்தகங்கள், 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும், அனுப்பப்பட்டுவிட்டன. மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்காக, 81.75 லட்சம் விற்பனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, பாடநூல் கழகத்தின், 22 வட்டார அலுவலகங்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம், தங்கு தடையின்றி, புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பாடநூல் கழக அலுலவலகத்திலும், பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பாட புத்தகங்கள் வினியோகம் மற்றும் விற்பனை புத்தகங்கள் குறித்து, mdtnbc07@hotmail.com என்ற இ - மெயில் மூலம், கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment