அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச "ஷூ': 23,878 பேருக்கு வழங்க ரூ.1.19 கோடி ஒதுக்கீடு
அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,), படிக்கும், 23,878 மாணவருக்கு, இலவச, "ஷூ' வழங்க, அரசு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில், 62 ஐ.டி.ஐ.,க்கள் உள்ளன. இவற்றில், 12 பெண்களுக்கானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக ஒன்றும், பழங்குடியின மாணவர்களுக்காக ஒன்றும், செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், தமிழக அரசு சார்பில், இலவசமாக, ஒரு ஜோடி ஷூ வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, 23,878 பேருக்கு, இலவச ஷூ வழங்க, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, இலவச ஷூ வினியோகம் செய்ய, "டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment