Pages

Saturday, September 14, 2013

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர்

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் தற்போதைய கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


அதனை உரிய வகையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். கல்வித்துறையில் பணியாற்றிய ஒருவர் 40 பதவிகளை வகித்து வந்துள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது போன்று எதுவும் நடைபெறாத வகையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியை பின்படுத்தப்படும். ஆசிரியர்களின் உழைப்பிற்கு ஏற்ற உதியத்தை அரசு வழங்கி வரும் நிலையில், வேறு இடங்களில் கூடுதலாக வேலை பார்க்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட வேண்டும். மாநிலத்தில் எழுத்தறிவு 66 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதமாக ஆசிரியர்களும் முக்கிய காரணம்.

ஆசிரியர்கள் பணி இட மாற்றங்களில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது என கவனத்திற்கு வந்துள்ளது. இது சரி செய்யப்படும்.

பள்ளிகளில் தங்கள் பணியினை சிறப்பாக செய்யும் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அரசு, பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார். நிகழ்ச்சியில் கல்வித்துறை மூத்த அதிகாரி சீத்தம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment