Pages

Thursday, September 5, 2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., சேர்க்கை

மேலும் விவரங்களுக்கு click here

தமிழ்நாடு திறந்தநிலை பல்லைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி 2013-15ம் கல்வி ஆண்டிற்கான படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இப்படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.எட் சிறப்புக் கல்வி தமிழக அரசு, ஆர்சிஐ அங்கீகாரம் பெற்றது. பி.எட் சிறப்புக்கல்வி படிப்பிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழக அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலம் பெற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.550க்கான வங்கி வரைவோலையை பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கான தகுதி குறித்த விவரங்களுக்கு என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment