Pages

Friday, September 20, 2013

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 90 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 80 சதவீதமாக உள்ளது. இதனை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை வைக்கப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த அமைச்சரவை, கடந்த ஜூலை 1ம் தேதியைக் கணக்கிட்டு அகவிலைப்படியை 90 சதவீதமாக உயர்த்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment