Pages

Sunday, September 29, 2013

மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் மொபைல் போன் கொண்டு வர தடை

மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் மொபைல் போன் கொண்டு வர தொடக்க கல்வித்துறை இயக்குனநர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறுகின்றது. மாணவர்கள் பள்ளியில் சரிவர பாடத்தை கவனிப்பது இல்லை. 


மேசைக்கு அடியில் வைத்துக் கொண்டு மொபைல் போனை இயக்கி வருவதாக பல புகார்கள் சமீபத்தில் எழுந்துள்ளன. எனவே பள்ளியினுள் கண்டிப்பாக மொபைல் போன் கொண்டுவர கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் விதமாக, தலைமை ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment