Pages

Tuesday, October 29, 2013

எஸ்எம்எஸ்சுக்கு ஏற்ப கட்டணம்:ரிசர்வ் வங்கி

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 


வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்ற விவரங்களை உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்து வருகின்றன. இதற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட தொகையை வசூலிக்காமல் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எவ்வளவு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறேதா அந்தளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் இன்று நடந்த ரிசர்வ் வங்கியின் காலாண்டு ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையில் இந்த அறிவுறுத்தல் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment