Pages

Tuesday, October 29, 2013

ஆங்கில வழி கல்வியால் தமிழ்மொழிக்கு பாதிப்பில்லை: கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதால் தமிழ்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது. 


தமிழக சட்டப்பேரவையில் துணை நிதிநிலை அறிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதால், தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்கும் என்றார்.



இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வி மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், படித்து முடித்தப் பின்னர், வேலை வாய்ப்புக்கு ஆங்கில மொழி அவசியம் தேவைப்படுவதாக கூறினார். இதனை பயன்படுத்தி, பல தனியார் பள்ளிகள் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை கருத்தில் கொண்டே, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதன் காரணமாக, தமிழ்மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment