Pages

Wednesday, November 20, 2013

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) அமைப்பின் இன்றைய முக்கிய தீர்மானங்கள்

1. டிட்டோஜேக் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை 04.12.2013 புதன் அன்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுவதெனவும்..,

2. மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பெற்று கூட்டமைப்பை ஒருங்கிணைத்து வழிநடத்திட சங்க வாரியாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக அரசும் வழங்கிட வேண்டும்.



2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும்.

3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும், நிர்ணயம் செய்திட வேண்டும்.

4. (அ) FR 22 ன் படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும்

(ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து
வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை
அமல்படுத்திட வேண்டும்.


6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி
கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.

7 . அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம்நிரப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment