Pages

Thursday, December 5, 2013

தமிழகத்தில் 356 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மத்திய அரசு முடிவு



தமிழகத்தில் மத்திய அரசு தனியார் கூட்டு முயற்சியில் 356 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு...

முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியுடன், இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், தமிழகத்தில் 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment