Pages

Tuesday, December 10, 2013

மதுரை காமராஜ் பல்கலையில் காலவரையின்றி விடுமுறை: துறை அலுவலகங்கள் செயல்படும்

மதுரை காமராஜ் பல்கலையில், வகுப்புகள் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு, நேற்று முதல் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது.


பல்கலைக்கு எதிராக செயல்பட்ட புகார் அடிப்படையில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் சிலரை "சஸ்பெண்ட்' செய்து, "சிண்டிகேட்' முடிவு எடுத்தது. இதை எதிர்த்து, ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் உட்பட சிலர் 6 நாட்களாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை தரப்பில், அவர்களுடன் நான்கு முறை பேசப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை, மாணவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராடப் போவதாக மாணவர்கள் அறிவித்தனர். நேற்று மாலை, துணைவேந்தர் கல்யாணி தலைமையில், அவசர "சிண்டிகேட்' கூடியது. பல்கலையில் 20 புலங்களில் செயல்படும் வகுப்புகள், எம்.ஏ., -எம்.பில்., -பி.எச்டி., மாணவர்கள் தங்கும் 5 விடுதிகள்; 2 மாணவியர் விடுதிகளை காலவரையின்றி மூட முடிவு செய்யப்பட்டது.


துணைவேந்தர் கூறியதாவது:



போராடும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை. போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருந்தனர். இதனால், 20 புலங்களில் நடக்கும் வகுப்புகள், அனைத்து விடுதிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள், விடுதிகள் துவங்கும் தேதி, பிறகு அறிவிக்கப்படும். மாணவர்வசதிக்காக பல்கலையில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டது. துறை அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

No comments:

Post a Comment