Pages

Saturday, April 19, 2014

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 


இங்கு கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 5 சட்டசபைத் தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. பகலில் வெயில் கொளுத்தியதால் வாக்குப்பதிவு குறைவாக இருந்தாலும், மாலையில் மக்கள் திரண்டு வாக்களிக்க வந்தனர். இங்கு 63% வாக்குகள் பதிவானது. நேற்றைய வாக்குப்பதிவின் போது, மஹாகல்பாடா தொகுதியில் நடந்த தேர்தல் பணிகளுக்கு வராமல் 54 அரசு ஊழியர்கள் புறக்கணித்தனர். இவர்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment