வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம், போன்றவற்றை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலை, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக, அக்., 2 மற்றும் 5ம் தேதி நடைபெறும், கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
வெளியீடு : வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு முகாம், அக்., 6, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த ஆண்டு ஜனவரி, 6ம் தேதி வெளியிடப்படும். அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயதை எய்துவோரும், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, முறைப்படி விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, தேசிய வாக்காளர் தினமான, ஜனவரி, 25ம் தேதி, ஓட்டுச் சாவடிகளில் வழங்கப்படும். தமிழகத்தில், சட்டசபை வாரியாக, ஓட்டுச்சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 58,761ல் இருந்து 60,418 ஆக உயர்ந்துள்ளது.
ஓட்டுச்சாவடிகள் விவரம், சட்டசபை தொகுதி வாரியாக, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முகவர் : அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகள் அனைத்தும், ஓட்டுச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும். அவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், தவறுகளை கண்டுபிடிக்க, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, உதவ வேண்டும். அரசியல் கட்சிகள், முகவர்களை நியமித்தால், அவர்கள் விவரம், தலைமை தேர்தல் அதிகாரி, இணைய தளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு, பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment