கடந்த, 2012ல், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், அரசு பள்ளிகளில் இசை, கைத்தொழில், உடற்கல்விப் பிரிவுக்கு, 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப் படுகிறது.இத்தொகை, கிராமக் கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டது. இதனால், 10ம் தேதிக்கு பிறகே, சம்பளம் கிடைத்தது. இப்பணத்தை, சில பள்ளிகளில் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், புகார் எழுந்தது.
இதையடுத்து, "செப்டம்பர் மாதத்தில் இருந்து, பகுதிநேர ஆசிரியர்களுக்கு, வங்கிகள் மூலம், "இ.சி.எஸ்.,' முறையில் சம்பளம் வழங்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர் களுக்கு, வங்கிக் கணக்குகள் துவங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment