தமிழகத்தின் புதிய பள்ளிக்
கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவை அடிக்கடி
மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக்
கல்வித்துறைக்கு மட்டும்
இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, October 30, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு
தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில், முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Tuesday, October 29, 2013
தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
மக்கள் கல்விக் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை நடைமுறைப்படுத்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆங்கில கல்வி திட்டத்தை திரும்ப பெற வேண்டும், கிராமப்புற மாணவர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி, 25 சதவிகித ஓதுக்கீட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆங்கில வழி கல்வியால் தமிழ்மொழிக்கு பாதிப்பில்லை: கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டதால் தமிழ்மொழிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
டி.ஆர்.பி. தேர்வில் பிழையான கேள்வித்தாள்: மறுதேர்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் ஊதியம் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்எம்எஸ்சுக்கு ஏற்ப கட்டணம்:ரிசர்வ் வங்கி
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள, 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள, 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது.
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE நாளை முதல் (29.10.2013) - மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு
திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMSமூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 9.40 மணிக்குள் SMS மூலமும்,மாலை எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் காலை 10.00 மணிக்குள் ஆசிரியர்களின் வருகையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அனுமதி
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை அறிவித்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1300 பேருடையை சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள்,டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது
Friday, October 25, 2013
ஒன்பதாம் வகுப்பிற்குறிய Text Books Online - Standard IX - Term II Books
Thursday, October 24, 2013
பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
PG TRB certificate verification stay order - clarification.
TN PG TRB announced the exams in the month of april 2013. Then it conducted the exam over all Tamilnadu in July 21,2013. Nearly 1.59 candidates appeared for the exam. The total vacancies are 2881.
After valuation TRB released the Final Answer keys and marks. But the Tamil candidates were not get any solution till today. They are worried about whether the Teacher Recruitment Board conduct re-exam (or) re-valuation the answers of 110.
After valuation TRB released the Final Answer keys and marks. But the Tamil candidates were not get any solution till today. They are worried about whether the Teacher Recruitment Board conduct re-exam (or) re-valuation the answers of 110.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது.
பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி
கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய, அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள் மூடப்பட்டன.
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி - அக்., 26 முதல் பி.எட்., வகுப்புகள்
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடைபெறும் பி.எட்., படிப்பிற்கான வகுப்புகள் அக்.,26 முதல் 2ம் ஆண்டு (13ஏ) மாணவர்களுக்கும், நவ.,9 முதல் முதலாம் ஆண்டு (14ஏ) மாணவர்களுக்கும் நடக்கின்றன.சென்னை, மதுரை, கரூர், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வகுப்புகள் நடக்கின்றன என, கூடுதல் இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
