கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Wednesday, February 5, 2014

  இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு.

  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம்
  ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது.   இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.. இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.

  இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.

  அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

  தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால்பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதையநிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

  இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்து அரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  No comments:

  Post a Comment