கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, September 17, 2014

    ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும் - இயக்குனர் வலியுறுத்தல்

    புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள்கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன்வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: 


    மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும்வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதியவார்த்தைகளை கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள்மனதில் பதியும் வகையில் விளக்க வேண்டும். வரலாற்றுசம்பவங்களை, தற்போது நடைமுறையில் உள்ள சில நிகழ்வுகளுடன்ஒப்பிட்டு கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். 'புரிதல் இல்லாத அறிவு என்பது வீண்' என்று ஆசிரியர்கள்புரிந்துகொண்டு அதற்கேற்ப கற்பித்தல் பணியை மேற்கொள்ளவேண்டும், என்றார்.




    முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்விஅலுவலர் சுப்பிரமணியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்பாலகிருஷ்ணன் (டி.கல்லுப்பட்டி), விஜயராஜன் (நர்சரி பள்ளிகள்),மோசஸ் பெஞ்சமின் (மதுரை வடக்கு) உட்பட பலர்கலந்துகொண்டனர். 15 கல்வி வட்டாரங்களில் இருந்து வாசிப்புமற்றும் எழுதும் திறனில் மிகவும் பின்தங்கிய தலா ஐந்து பள்ளிகள்வீதம் 75 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

    No comments:

    Post a Comment