தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், குரூப் 4 தேர்வு எழுத 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, முன்பு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு, வயது வரம்பு இல்லை. அதே போல், குரூப் 2 தேர்வுக்கும் வயது வரம்பு இல்லை. இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி., மூலம் வி.ஏ.ஓ., வேலைக்கு 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தேர்வு எழுத முடியாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேல்நிலைக்கல்வி, கல்லூரி படிப்பு முடித்து, 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள், இத்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. "அரசு வேலைவாய்ப்பிற்காக, இது போன்ற தேர்வை தொடர்ந்து எழுதி வரும் எங்களைப் போன்றவர்களுக்கு, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே பணி வழங்கும் நிலையில், தேர்வு எழுத வயது வரம்பை தளர்த்த அரசு வேண்டும், என பாதிக்கப்பட்டோர், கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment