கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, April 15, 2013
அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மசோதா தாக்கல்
அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 14, 2013
துறைத்தேர்வுகள் மே-2013 விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு.
துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு
மே மாதம் நடைபெறும் துறைத்தேர்வு எழுதுவதற்கான தேதி 22-4-2013 மாலை 5-45 வரையில் நீட்டிக்கப்படுகிறது.
ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை
click here download to ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை கடிதம்
பல்வேறு காரணங்களினால் அறிந்தவைகளே சில நேரங்களில் நமக்கு மறந்துவிடுகிறது. எனவே நம் நண்பர்களுக்காக நினைவுபடுத்துவதற்காக இதனை வெளியிடுகிறோம்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன்
கூறினார்.
கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி "குரூப்' கட்டாயம் - மத்திய அரசு
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி "குரூப்' கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட குரூப் கட்டாயம் இருக்கும்.
Saturday, April 13, 2013
20 ஆயிரம் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது ?
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.
T.N.P.S.C., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்விகள் : அடுத்த வாரம் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.
Friday, April 12, 2013
அறிந்து கொள்வோம் ! பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.
பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.இந்திய அளவில நடக்கும் NTSE தேர்வு.இதன் மூலம் வருடா வருட படிப்பு முடியும் வரை ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்க படுகிறது. மிக பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்று. போன்ற வருடம் வரை எட்டாம் வகுப்புக்கு நடந்து கொண்டு இருந்தது. இனத வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகிறது. அதன லிங்க்
http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html
http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html
போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்
தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர் பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புதிய கல்விக்கடன் திட்டத்தின்படி, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு, வேறுபாடின்றி கடன் வழங்க வேண்டும். : ஐகோர்ட் உத்தரவு
மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன் வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.புதூர் ராமவர்மாநகர் முனியசாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பார்த்தசாரதி. இவர், காஞ்சிபுரம் அருகே அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ., படிக்கிறார்.
"ஆன்-லைன்' பதிவில் 22 லட்சம் மாணவர் விவரம் இல்லை: விடுபட்டு போன மர்மம் என்ன?
தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.
முதுகலை தாவரவியல் ஆசிரியர், தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.
பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.
Thursday, April 11, 2013
தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் - கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, பி.எட். கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ரூ.46 ஆயிரத்து 500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41 ஆயிரத்து 500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
Wednesday, April 10, 2013
மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 ஆசிரியர்கள்
மதுரை காமராஜ் பல்கலையில் 73 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இப்பல்கலையில் 107 படிப்புகள் உள்ளன. சினிமா தொழில்நுட்பம், சுற்றுலா மேலாண்மை உட்பட 80 படிப்புகள் கடந்த ஆண்டில் துவக்கப்பட்டன. புதிதாக இளைஞர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரு இருக்கைகள் உட்பட 18 இருக்கைகளும் (ஸ்கூல்) உள்ளன.
மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து,மே 4 ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஓட்டுசாவடி அலுவலர் பணியிட உத்தரவை வாங்க மறுக்கும் ஆசிரியர்கள்
ஓட்டுசாவடி பணி அலுவலர் பணியிட உத்தரவை, இடை நிலை ஆசிரியர்கள் வாங்க மறுத்து வருவதால்,தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.ஒவ்வொரு
பகுதிக்கும், தேர்தல் ஆணையத்தால், ஓட்டு சாவடி அலுவலர்கள்
நியமிக்கப்படுகின்றனர்.
கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.
மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து,...
பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
Tuesday, April 9, 2013
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், விருப்பப் பாடமாக, சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.
Monday, April 8, 2013
செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது : தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், ""பாதிக்கப்பட்ட, 221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
SBI-Pre-Examination Training Call Letter.
Recruitment of Probationary Officer |
Pre-Examination Training Call Letter. | |||
| Login | |||
| Registration No *: | |||
| (AND) | |||
| Date Of Birth *: | (DD-MM-YY) | ||
| (OR) | |||
| Password *: | |||
| Frequently Asked Questions | |||
| 91549 | |||
ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்.
ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் இவ்வாறு பேசினார்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
9.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)