டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, October 8, 2013
10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வெளியாகுமா அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 10% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை
தமிழ்நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
பசுமைப்படுத்தல் திட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி வளாகங்களில், 13 லட்சத்து 93 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நட, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதில், வனத்துறை மூலம் 3 லட்சத்து 75ஆயிரத்து 545 கன்றுகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 150 கன்றுகளும் நடப்பட உள்ளன. இவை அனைத்தும், அக்.,31க்குள் நடப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை வகுப்பு வாரியாக மாணவர்கள் பராமரிக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை.
முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்தி : முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை.
முக்கிய செய்தி : முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை.
Monday, October 7, 2013
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க செல்போனில் வசதி
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி செல்போனில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.இந்த வசதியால் இனி செல்போனிலே பாஸ்போர்ட் வின்னப்பிக்க, கட்டணம் செலுத்த வசதி செய்யப்படுகிறது.
அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் : இயக்குனர் எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.
2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், தொகுப்பூதிய அடிப்படையில், உடனடியாக நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில், ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முது நிலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவும் இறுதி விடைத்தாள் (ANSWER KEY ) வெளீயீடு - EXCEPT TAMIL
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Examination Result
Direct
Recruitment of Post Graduate Assistants for the year
2012 - 2013
FINAL
ANSWER KEY
| Telugu | Geography | |
| English | Economics | |
| Mathematics | Commerce | |
| Physics | Political Science | |
| Chemistry | Home Science | |
| Botany | Physical Education Director Grade I | |
| Zoology | Micro - Biology | |
| History | Bio - Chemistry |
மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. பதவி உயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்புகிறார்கள்.
D.T.ED + B.A(TAMIL ) & B,LIT + TPT & D.T.ED + B.LIT அனைத்தும் NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER (B.Ed படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் )-ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI-NEWS
ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதிய பலன்கள் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, 8 வாரங்களில் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,கரூர் மாவட்டங்களை சேர்ந்த சோமசுந்தரம், மகாலிங்கம், செல்வராஜ்,வீரபாண்டியன், தர்மராஜ், நாகராஜன், ஜெயச்சந்திரன்,ஆரோக்கியசாமி, மாரிமுத்து, மோகன், சந்திரசேகரன், ராமலிங்கம்,,சந்திரகாசன், கோசவலு உட்பட 16 பேர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது
2,881 காலி இடங்கள்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும்1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,881 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும்1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் எழுதினார்கள். தேர்வுக்கான தாற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது.
இரட்டைப்பட்டம் வழக்கு- புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.
ஒரே மாதத்தில் 11 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அக்டோபரில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஆசிரியர், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத் பண்டிகை உட்பட பண்டிகைகளுக்கு மட்டுமே 3 நாட்களும், சனி,ஞாயிறு எட்டு நாட்கள் விடுமுறை என, ஒட்டு மொத்தமாக, 31 நாட்களில், 11 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால், அரசு ஊழியர்,ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறை நாட்களில், புத்தாடை எடுக்கும் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.துணிக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படும்
தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்?ஷ் அபியான்) துவக்கப்பட்டது.
ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும், இடைநிற்றல் இன்றி, ஆரம்பக் கல்வியை முடிக்க வேண்டும். மேலும், 1 கி.மீ., தூரத்துக்குள், ஒரு தொடக்கப் பள்ளியும், 3 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நடுநிலைப் பள்ளியும் துவங்கப்பட்டு, அதற்கு தேவையான கட்டடம், கழிப்பறை, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
Saturday, October 5, 2013
Friday, October 4, 2013
இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும்.
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு 1.8 கோடி புத்தகங்கள் விநியோகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக மொத்தம் 1.8 கோடி இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.
Thursday, October 3, 2013
மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி, அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு
அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்
ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது. கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது.
முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
Tuesday, October 1, 2013
முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித்தேர்வு - மறுதேர்வு 6 வாரங்களுக்குள் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
டி .ஆர். பி யின் ஆலோசனைகள் பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான
40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும்
வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு
கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை அனைத்தையும் நிராகரித்த
நீதிபதி தீர்ப்பு ஆணை கிடைத்த 6 வாரங்களுக்குள் தேர்வு நடத்தப்பட
வேண்டும்.புதிய விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படக் கூடாது. பழைய ஹால்
டிக்கட் இணையத்தளம் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் .என
தீர்ப்பளித்தார்
Subscribe to:
Posts (Atom)

